நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ இந்திய பொருளாதாரம் சீரழிந்ததை மறைக்க பாஜகவால் கிளப்பி விடப்பட்டது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

ரம்யா பாண்டியன் சேலைகட்டிய போட்டோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இது பாஜக திட்டமிட்டு வைரலாக்கியதாக சிலர் கிளப்பி விட்டு வருகின்றனர். ’’இந்திய பொருளாதாரம் சீரழிந்தை மறைக்க சங்கிகளால் கிளப்பி விடப்பட்டது தான் இன்றைய ட்ரெண்ட்டில் உள்ள ரம்யா பாண்டியன் இடுப்பு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்’’ என ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரம்யா பாண்டியனின் போட்டோவை வைத்து பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

 

சிரிப்பை விட அவர் கண்கள் பேசும் காதல் மொழியை விட இத்தனை தாண்டி ஒரு நடிகையாக அவர் நடிப்பை விட இந்த ஆண்களுக்கு அவரின் இடுப்பு மடிப்புதான் பேசுபொருள் ஆகியிருக்கிறது என்றால் இந்த சமூகத்தை எண்ணி அச்சம் உண்டாகிறது.

 

இச்செல்லத் தொப்பையின் குழைவு  மட்டும் குறைந்தே விடக்கூடாது என்பதை  மிகக்கவனமாக கருத்தில்கொண்டே ரம்யாபாண்டியன்  உடற்பயிற்சி செய்வார் என்றவதானிக்கிறேன். 

 

அத்தி வரதர் போயாச்சு ரம்யா பாண்டியன் வந்தாச்சு, நமக்கு யாராவது ஒருத்தர் சிக்கீர்றாங்க.. அந்த இஞ்சி இடுப்பழகி ரம்யா பாண்டியன் நடிகர் அருண் பாண்டியனோட வாரிசா..? நடுநாட்டு திவ்ய தேசங்கள் என்று வைணவத்தில் ஒரு குறிப்பு உண்டு... ஏனோ ரம்யா பாண்டியன் நினைவுக்கு வந்து போனார்’’ என்றெல்லாம் கருத்துக் கூறி வருகின்றனர்.