பட வாய்ப்பு இல்லாததால் தரை மட்டத்துக்கு இறங்கி வந்து தனது இடுப்பு மடிப்பு ஸ்டில்களைப் போட்டு நடிகை ரம்யா பாண்டியன் வாய்ப்பு தேடி வந்ததைப் பயன்படுத்தி, அவர் பெயரில் ஃபேக் ஐடி துவங்கிய ஒருவர் அவரது படுபயங்கரமான டாப்லெஸ் படம் என்ற பெயரில் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

’ஜோக்கர்’, ’ஆண் தேவதை’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரம்யாபாண்டியன். அண்மையில் இவர் தன் வீட்டு மொட்டை மாடியில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் ஒரு குறிப்பிட்ட ‘இடுப்பு மடிப்பு ஸ்டில் வைரலாகப் பரவி அவருக்கு ஆர்மி துவங்கும் அளவுக்குப் புகழ் சேர்த்தது. ’ஜோக்கர்’என்ற மாபெரும் முழு நீள வெற்றிப்படம் தராத புகழை அந்த ஒரு சிங்கிள் ஸ்டில் அவருக்கு கொண்டு வந்து சேர்த்தது. அதைத் தொடர்ந்து சில பட வாய்ப்புகள் அவரது கதவைத் தட்டியிருப்பதாகத் தகவல்.

இந்நிலையில் நேற்றிரவு அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு காணொலி பதிவில் என்னுடைய ட்விட்டர் கணக்கின் பெயர் இதுதான் என்றும் இன்ஸ்டாகிராமில் என்னுடைய கணக்கின் பெயர் இதுதான் என்றும் இவையிரண்டும் தான் உண்மையானவை என்று சொல்லியிருந்தார்.திடீரென அவர் இப்படி ஒரு காணொலியை வெளியிடக் காரணம் இருக்கிறது. நடிகை ரம்யாபாண்டியன் என்றொரு ட்விட்டர் கணக்கில், அரை நிர்வாணக் கோலத்தில் முதுகுகாட்டி அமர்ந்திருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ரம்யா பாண்டியன் அணிந்திருக்கும் அதே காதணியுடன் உடல் தோற்றமும் ஓரளவுக்கு ஒத்துப்போனதால் அதை உண்மை என்று நம்பிய நிறையப் பேர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பட வாய்ப்பு இல்லாததால் இந்த அளவுக்கா இறங்கிவரவேண்டும் என்று ஒரு பக்கம் ரசித்துக்கொண்டே கோவித்தார்கள். அந்த ஆசாமிகளுக்காகவே தனது உண்மையான ட்விட்டர் கணக்கு, இன்ஸ்டாகிராம் கணக்கு ஆகியவற்றை ரம்யா பாண்டியன் வெளியிட்டதாகத் தெரிகிறது.

அவரது விளக்க வீடியோ இதோ...