இந்நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு கொடுத்த டாஸ்க் மூலம் அனைவருமே அழுது விடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.  ’நீங்கா நினைவுகள்’ என்ற டாஸ்க்கில் யார் யாரை எல்லாம் நீங்கள் மிஸ் செய்கிறீர்கள் என்பது குறித்து அவரவரது அனுபவத்தை சொல்ல வேண்டும் என்று பிக்பாஸ் கூறுகிறார்.

இதனை அடுத்து முதலில் பேச வந்த ரம்யா பாண்டியன், ’அர்ச்சனா வந்து எதையோ எடுத்த போது, அம்மாவின் ஞாபகம் வந்தது’ என்று கூறி கண்ணீர் விடுகிறார். ’பிக்பாஸ் வீட்டில் 24 மணி நேரமும் சிரித்து கொண்டே இருந்த ரம்யா இன்று குலுங்கி குலுங்கி அழுததை இன்று  பார்க்க முடிந்தது.

இதை தொடர்ந்து பேசும் சம்யுக்தா, என் கணவர் கார்த்திக் குறித்து நான் இதுவரை அதிகம் பேசியதே இல்லை என்றும் அவரை மிஸ் பண்ணுவதாக கண்கலங்கிய அழுகிறார். பின்னர் சுரேஷ் சக்கரவர்த்தி,  பாலாஜியை பார்க்கும்போது எனது மகனை பார்ப்பது போல் உள்ளது என சென்டிமென்ட்டாக பேசுகிறார்.

எனவே எப்படியும் இன்றைய தினம், தங்களுடைய குடும்பத்தினரை நினைத்தது.... அனைவருமே கண் கலங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...