நடிப்பில் பல பரிமானங்களில் ஜொலித்து வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அடுத்து ஆபாச பட நாயகியாக நடிக்க உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாசப் பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார். ஆரண்யகாண்டம் படத்திற்கு பிறகு குமாரராஜா தியாகராஜன் இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்து வருகிறார். 2019ம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. குமாரராஜா தியாகராஜவின் திரைக்கதை படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் என கோலிவுட்டில் பேசப்படுகிறுது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் என்ன என்பதை இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் வெளிப்படையாக கூறியுள்ளார். இந்தப்படத்தில் ரம்யாகிருஷ்ணன் ஆபாசப்பட நடிகையாக நடித்து வருகிறாராம். ஏற்கெனவே இந்தக் கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக இருந்தது. ஆனால் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில காரணங்களால் அவர் இப்படத்தில் இருந்து விலகி விட்டார். அதனைத் தொடர்ந்து ரம்யாகிருஷ்ணன் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

’’ஆபாச நடிகை கேரக்டர் என்றாலும் எல்லை தாண்டாத கவர்ச்சியில் தான் ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளார். அவருடைய கேரக்டருக்கு பின் ஒருவிதமான அழுத்தமும் சஸ்பென்ஸும் இருப்பதால் இந்த படத்தை பார்த்த பின்னர் அவர் ஏன் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்’’ என்று இயக்குனர் குமாரராஜா தியாகராஜன் தெரிவித்துள்ளார்.