ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் கங்கனா ரணவத் நடித்த தலைவி படத்திற்கு ஜெ.தீபாவால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து தலைவி என்ற தலைப்பில் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். இப்படம் இந்தியிலும் உருவாகிறது. இதேபோல் குயின் என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனிடையே, தன் அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகள் ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க தடை கோரி உரிமையியல் வழக்கு தொடர ஜெ.தீபாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.