சென்னை மெரினா கடற்கரை சாலையில் வைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிலையை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து சிவாஜியின் சிலை நேற்று முன்தினம் இரவோடு இரவாக, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ராட்சத கிரேன்கள் கொண்டு அகற்றப்பது.

தற்போது இந்த சிலை அடையாறில் கட்டப்பட்டு வரும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிவாஜியின் சிலை அகற்றப்பட்டது குறித்து, அவருடைய மகன்களான பிரபு மற்றும் ராம்குமார் கூறுகையில், உயர் நீதி மன்றத்தின் உத்தரவை மதிப்பதாகவும் அப்படி தான் தன்னுடைய தந்தை எங்களை வளர்த்துள்ளார் என்று தெரிவித்தனர். 

மேலும், அரசின் முறையான அனுமதியை பெற்று விரைவில், சிவாஜிகணேசன் தன்னுடைய தலைவராக ஏற்றுக்கொண்ட காமராஜர் அவர்களின் சிலை பக்கத்தில் மெரினாவில் மீண்டும் சிவாஜியின் சிலை அமைக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.