எனக்கும் "அஜித்துக்கும் பூர்வ ஜென்மம் பந்தம் உள்ளது"... அதனால் தான் இது நடந்தது... ரமேஷ் கண்ணா உருக்கம்...
அஜித்துடன் நடித்தவர்கள் அவ்வப்போது தாங்கள் 'தல'யுடன் நடித்த படங்கள் பற்றியும் அவருடன் பழகிய நினைவுகளையும் செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம் தான்.
அந்த விதத்தில் அஜித்துடன் வரலாறு', ;அட்டகாசம்', 'ஆஞ்சநேயா', 'வில்லன்', 'அமர்க்களம்', 'உன்னை கொடு என்னை தருவேன்', போன்ற படங்களில் நடித்துவரும் அஜித்தை வைத்து 'தொடரும்' என்கிற படத்தை இயக்கியவருமான ரமேஷ் கண்ணா இருவருக்கும் உள்ள நட்பு பற்றி மனம்திறந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் எனக்கும் அஜித்துக்கும் போன ஜென்ம பந்தம் இருக்கும் என நான் நினைக்கிறேன் என்றும். அதனால் தான், நான் இயக்கிய முதல் படமான 'தொடரும்' படத்தில் அஜித் நடித்தார் என கூறி மெய்சிலிர்த்து போனார்.
பின் அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் கொண்டிருந்த அஜித், புதுமுக இயக்குநர் என நினைக்காமல் என்னுடைய இயக்கத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது என்று கூறியுள்ளார். மேலும் அவருடைய நிறைய படங்களில் நான் நடித்திருப்பதும் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன்' என்று பேட்டி ஒன்றில் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.