ramba pregenent for third time

90 களின் முன்னணி நடிகையாக கொடி கட்டிப் பறந்தவர் தொடையழகி ரம்பா. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வரும் அஜித், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர்.

தற்போது சின்னத்திரையில், நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

கனடா நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரகுமார் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு, திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு தற்போது லான்யா மற்றும் ஷாஷா என்று இரு பெண் குழந்தைகள் உள்ளது. 

இரண்டாவது குழத்தை பிறந்த சில மாதங்களில் இந்திரகுமாருக்கும், ரம்பாவிற்கும் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது விவாகரத்து வரை சென்றது.

பின் இருவரும் தங்களுடைய குழந்தைகளின் வருங்காலத்தை மனதில் வைத்து ஒன்றாக வாழ விரும்புவதாக கூறினார்.

பின் இருவரும் இணைந்தார்கள். இந்நிலையில் ரம்பா மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்க தயாராகிவிட்டார். அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதனை உறுதி செய்துள்ளார். இதனால் இவருடைய ரசிகர்கள் பலர் தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.