பிரபலங்களை பற்றி வதந்திகள் பரவுவது புதியது அல்ல, அந்த வகையில் நேற்று தமிழ் சினிமா துறையினரை அதிர்ச்சி அடைய வைத்தது நடிகை ரம்பாவில் விவாகரத்து செய்தி. 

அதே போல் ரம்பா மற்றும் அவரது கணவரும் அவர் நீண்ட நாட்களாகபிரிந்து இருப்பதாகவும், தங்களை சேர்த்து வைக்குமாறு ரம்பா கோர்ட்டை அணுகியதாகவும் மற்றொரு செய்தியும் உலா வந்தது.

இந்த விஷயம் குறித்து நடிகை ரம்பா ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளிதுள்ளார்.

அதில் என் திருமண வாழ்க்கை பற்றி வதந்தி பரவியுள்ளதாக என் சகோதரர் மூலம் தற்போது தான் இந்த செய்தி தனக்கு கிடைத்தது என்று கூறியுள்ளார்.

அப்படியே நான் நீதிமன்றத்திற்கு வந்திருந்தால் மக்களுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்கும்.

தற்போது எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். என் மூத்த மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர கிளம்புகிறேன். என் திருமண வாழ்வில் எந்த பிரச்சனையும் இல்லை என ரம்பா தெரிவித்துள்ளார்.

இவரது விவாகரத்து விஷயம் நேற்று காட்டு தீ போல் பரவி கோலிவுட் தினையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்த இந்த விஷயம் ஒரு செய்தியாக தான் ரம்பாவுக்கு கிடைத்துள்ளது.