உள்ளத்தை அள்ளித்தா’, ‘அருணாச்சலம்’, ‘காதலா காதலா’, ‘குயிக் கன் முருகன்’ உட்பட தமிழ், தெலுங்கு, இந்தி, போஜ்புரி, கன்னடம், மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்பா. ‘த்ரீ ரோஸஸ்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார்.

இந்த நிலையில், கனடா மேஜிக் வுட்ஸ் நிறுவனம், ரம்பாவை தங்கள் கம்பெனி விளம்பர தூதுவராக நியமித்தது. அந்நிறுவன உரிமையாளர் இந்திரன், ரம்பாவுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள காரை அன்பளிப்பாக வழங்கினார். இதனால் இந்திரனுக்கும், ரம்பாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்து திருமணம் செய்து கொண்டனர்.

கனடா மேஜிக் வுட்ஸ் நிறுவன உரிமையாளர் இந்திரன், ரம்பா காதல் திருமணம் கடந்த 2010 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம்தேதி திருப்பதியில் நடைபெற்றது. அதன் பின்னர் படத்தில் நடிப்பதை நிறுத்தினார் ரம்பா. 

இந்நிலையில் 5 ஆண்டிலேயே மணவாழ்வு கசந்து போனது , இதையடுத்து ரம்பா , இந்திரன் இருவரும் விவாகரத்து செய்துகொள்ள தீர்மானித்தனர். இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைந்துள்ள குடும்ப நலகோர்ட்டில் விவாகரத்து கோரி நடிகை ரம்பா மனு செய்துள்ளார். iந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விவகாரத்து வழக்கு டிசம்பர் 3ம் தேதிக்கு விசாரணைக்கு வருகிறது.