தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக வாழ்க்கையை ஆரமித்தவர் நடிகர் ராமராஜன். பின் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார், இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட் கொடுக்கவே புகழின் உச்சத்திற்கு சென்றார்.

ரஜினி கமல் கால்ஷீட் கிடைக்காதவர்கள் அடுத்து நாடியது ராமராஜனைத்தான். அவர் நடித்த கரகாட்டக்காரன் ஓராண்டு ஓடியது.

 நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார், அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் கையால் தாலி எடுத்துகொடுத்து சீரும் சிறப்புமாக கல்யாணம் நடந்தது.

பின்னர் சில காரணங்களால் எம்ஜிஆர் கையால் தாலி எடுத்து திருமணம் நடந்த ஜோடி பிரிந்தது. நளினிக்கு தனக்கு சொந்தமான தியேட்டரை கொடுத்து விட்டு இரண்டு குழந்தைகளோடு விட்டு விட்டு தனியாக வாழ்ந்தார் ராமராஜன்.

ஆனால் ராமராஜன், அனைத்தையும் இழந்து இன்று தனிமரமாய் இருக்கிறார், இவரின் இப்படி பட்ட நிலைமையிலும் இவருக்கு ஆதரவு கொடுத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா. கடந்த வாஜ்பாயி அரசாங்கத்தின் போது எம்.பியாக இருந்தார் ராமராஜன். தனி பங்களாவுடன் செல்வாக்கான வாழ்க்கை வாழ்ந்தார் ராமராஜன். 

சு.சாமியின் டீ பார்ட்டியால் வாஜ்பாயி அரசாங்கம் கவிழ 13 மாதத்தில் எம்.பி பதவியும் போய் கஷ்டத்துக்கு ஆளானார் ராமராஜன். அப்படியும் அதிமுகவுக்காக மேடை பேச்சாளராக வளம் வந்த ராமராஜனுக்கு 2011 வாய்ப்பு கிடைக்க இருந்த நேரத்தில் விதி ஆக்சிடெண்ட் வடிவில் வந்து வாய்ப்பை பறித்தது.

மீண்டும் பல விதத்திலும் இவருக்கு உதவிகள் செய்து வந்தது முதலமைச்சர் ஜெயலலிதாதான். இப்போது அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருவதை நினைத்து நினைத்து நெஞ்சுவலியல் கீழே விழுந்தார் ராமராஜன்.

இவர் வாடகைக்கு குடி இருக்கும் வீட்டின் முதலாளி, நளினிக்கு இந்த தகவலை தெரிவித்தவுடன் அடித்து பிடித்து ஓடி வந்து மருத்துவமனையில் அனுமதித்து பார்த்து கொள்கிறாராம் நளினி.

அதிகம் பணம் இருந்த போது இவர் ஒதுக்கிய காதல் மனைவிதான் இன்று இவருக்கு கை கொடுத்துள்ளார். என்னமோ இந்த ஜோடி மீண்டும் இணைந்து ராமராஜன் வாழ்வில் மீண்டும் வசந்தம் ஏற்படட்டும்.