ராமராஜன், நளினி இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள் என்பது பலரும் அறிந்தது தான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர்கள் திருமண வாழ்க்கை சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது, பின் இவர்களுக்குகள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக கசந்து விட்டது.

அதனால் இருவரும் விவாகரத்து பெற்று சட்ட பூர்வமாக பிரிந்தனர். விவாகரத்திற்கு பின் நளினி தான் அவருடைய குழந்தைகளை கஷ்ட பட்டு வளர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் நளினி ‘ராமராஜன் பற்றி மனம் திறந்துள்ளார். அதில் நானும் ராமராஜனும் தற்போது நல்ல உறவில் தான் இருக்கிறோம் என்றும்.

ஆனால் திரும்பவும் சேர்ந்து வாழும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் தற்போது , அவருக்கு உடல்நிலை முடியாத போது கூட தான் போன் செய்து விசாரித்தேன் என்றும் .

மேலும், ஜெயலலிதா உடல்நிலை மோசமானதால் தான் ராமராஜனுக்கு நெஞ்சுவலி வந்தது என்றார்கள், ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை, அது முற்றிலும் வதந்தி தான்’ என கூறி வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.