ramanan acting movie
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் மழை என்றால் மிகவும் பிடிக்கும். காரணம் பள்ளிக்கு லீவ்... ஆபீஸ் லீவ் போட ஒரு காரணம் கிடைத்து விட்டது என்கிற நோக்கம் தான்.
மழை வந்தால் உடனே டிவியில் வருபவர், வானிலை மன்னன் ரமணன். இவர் வானிலை பற்றி பேசுவது பலருக்கும் பிடிக்கும். இதன் காரணமாகவே இவர் பிரபலமும் ஆகிவிட்டார்.

இவர் வானிலை மையத்தில் இருந்து ஓய்வு பெற்றதும், இவருக்கு ஒரு படத்தில் முன்னணி கதாநாயகி ஒருவருக்கு அப்பாவாக நடிக்க வாய்ப்புகள் வந்ததாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
