Ram Charan's birthday: ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கான பாராட்டுகளுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கான பாராட்டுகளுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பாகுபலியின் வெற்றிக்கு பிறகு, ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்த திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது.

ஆர்.ஆர்.ஆர்:
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் 2022-ம் ஆண்டு வெளியான நம்பர் 1 படம் என்ற சாதனையை படைத்தது.இந்த படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார். கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கதைக்களம்:
1920-களில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களான ராமராஜு, பீம் ஆகியோர் வாழ்க்கை கதையை முழுக்க முழுக்க கற்பனை கலந்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆர் ஆர் ஆர்.
வசூல் விவரம்:

கொரேனா காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் 2 நாட்களில் ரூ.340 கோடியை தாண்டி வசூலை குவித்துள்ளது. அதன்படி பாகுபலி படத்தை விட இப்படம் பெரிய வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது 38 வது பிறந்தநாளில் நெகிழ்ச்சியில் ராம் சரண்:
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் வெற்றியை தொடர்ந்து..ராம் சரண் தனது 38 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுவதால், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இதற்கு நன்றி தெரிவித்த ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில், , ''ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கான அபரிமிதமான பாராட்டுகளுக்கும், அன்புக்கும் நன்றி..இந்த மிக சிறந்த பிறந்தநாள் பரிசை நான் பணிவன்புடன் ஏற்று கொள்கிறேன்''. என்று கூறியுள்ளார்.
