அப்பா படத்தில் எனது காட்சிகள் வெட்டப்பட்டது உண்மை... மனம் திறந்த மெகா ஸ்டார் வாரிசு.!

இயக்குநர் சுரேந்திர ரெட்டி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் ”சைரா நரசிம்ம ரெட்டி”. ராயலசீமாவில் வாழ்ந்து வந்த சுதந்திர போராட்ட வீரரான உய்யவலாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு படம் தயாரிக்கப்பட்டது. இதில் அமிதாப் பச்சன், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி என பெரும் நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தது. படத்தின் நீளம் மற்றும் கதைக்காக கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், படம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பல தெலுங்கு படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனை தெறிக்கவிட்ட சிரஞ்சீவியை, ’பாக்ஸ் ஆபிஸ் ராஜா மீண்டும் வந்துவிட்டார்’ என அவரது ரசிகர்கள் தலைமேல் வைத்து கொண்டாடினர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,இந்தி என 5 மொழிகளின் டிஜிட்டல் உரிமை மட்டும் 40 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்தது.இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளரான சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா வடிவமைத்த ஆடைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. அவரது மகன் ராம் சரண் ”சைரா நரசிம்மா ரெட்டி” படத்தை தயாரித்தார். 


இந்நிலையில் ”சைரா நரசிம்மா ரெட்டி” படத்தில் அப்பா சிரஞ்சீவியுடன் சேர்ந்து, ராம் சரணும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. முதலில் இதனை மறுத்து வந்த ராம் சரண் தற்போது தனது மனம் திறந்துள்ளார்.  "சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் தான் நடிக்க இருந்ததாகவும், சில காரணங்களால் தனக்காக வடிவமைக்கப்பட்ட கேரக்டர், கதை விவாதத்தின் போதே வெட்டி வீசப்பட்டதாகவும்" மிகுந்த ஏமாற்றத்துடன் தெரிவித்துள்ளார்.  

மகனின் வருத்தத்தை அறிந்த தந்தை சிரஞ்சீவி, கண்டிப்பா நாம இரண்டு பேரும் சேர்ந்து படம் நடிக்கிறோம்ன்னு பிராமிஸ் பண்ணிக் கொடுத்திருக்காராம். இந்நிலையில் பிரபல இயக்குநர் கொரட்டலா சிவா இயக்க உள்ள அடுத்த படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறது கன்பார்ம் ஆகியிருக்கு. இப்போதைக்கு "சிரஞ்சீவி 152" என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் ராம் சரண் கூட்டணி சேர்வார்னு தெலுங்கு ரசிகர்கள் ரொம்ப ஆவல காத்துக்கிட்டு இருக்காங்க.