‘தீரன் அதிகாரம் ஒன்று’க்குப் பின்னர் மீண்டும் கார்த்தியுடன் ‘தேவ்’ படத்தில் இணைந்திருக்கும் ரகுல் பிரீத் சிங் தமிழில் தொடர்ந்து கார்த்திக் படங்களில் நடிக்க மிக ஆர்வமாக இருக்கிறேன் என்கிறார்.

தெலுங்கில் மிக பிசியாக நடித்து பிரித் சிங் தமிழில் சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’, கார்த்தியுடன் ‘தேவ்’ ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ‘தேவ்’ படம் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று ரிலீஸாக உள்ள நிலையில் நேற்று (பிப்ரவரி 5) இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், ரகுல் ப்ரீத்சிங் பேசியதாவது:

 இப்படத்திற்கு என்னை கார்த்திதான் சிபாரிசு செய்தார் என்றாலும் இயக்குநர் என்மேல் நம்பிக்கை வைத்து இந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார். கதை கேட்கும்போதே எனக்கு மிகவும் பிடித்தது. என்னுடைய கதாபாத்திரத்தை விரும்பி நடித்தேன். இந்தப் படத்துக்காக இயக்குநர் கடுமையாக உழைத்துள்ளார்.

கார்த்தியைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருடன் பணியாற்றுவது கடினமாக இருக்காது. எங்கள் கூட்டணியில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் இந்தப் படமும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். இணைந்து இன்னும் பல படங்களில் நடிக்கும் அழகான வாய்ப்பு கிடைக்கும்  என்று நம்புகிறேன்’ என்றார்.

தமிழில் நடிக்க ரகுல் பிரீத் சிங்கை யாராவது அணுகினால், கதையை முதலில் கார்த்தியிடம் சொல்லி ஓகே வாங்குங்கள் என்று ஏறத்தாழ கார்த்தியை தனது மேனேஜர் போலவே பாவிக்க ஆரம்பித்துவிட்டாராம். நடத்துங்க நடத்துங்க...