நடிகை ராகுல் ப்ரீத் சிங், மோசமான உடை அணிந்த போட்டோவை பதிவேற்றம் செய்ததால், நெட்டிசன்கள் காரசாரமாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழி சினிமா படங்களில் நடித்து வருபவர் ராகுல் ப்ரீத் சிங். வளரும் நடிகையான இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தற்போது புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். 

அந்த புகைப்படத்தில், ஒரு கிழிசலான ஜீன்ஸ் சட்டை போட்டபடி ராகுல் ப்ரீத் சிங், குறும்பாகச் சிரித்தபடி இருக்க, இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வைரலாக பரவ தொடங்கியுள்ளது. ஆனால், எந்த விசயத்தை பார்த்தாலும் குறை கண்டுபிடிக்கும் நெட்டிசன்கள், ராகுல் ப்ரீத் சிங்கின் இந்த ஆடையை மட்டும் விட்டு வைப்பார்களா?

 

இதன்படி, அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி, பல வித கமெண்ட்களை தெறிக்க விட, மறுபுறம் அவரது ஹேட்டர்கள், கழுவி ஊற்ற தொடங்கியுள்ளனர். பிச்சைக்காரர்கள் கூட நன்றாக உடை அணியும் இந்த காலத்தில், ராகுல் ப்ரீத் சிங் அதைவிட கேவலமான உடை அணிந்துள்ளதாக, சிலர் விமர்சித்துள்ளனர். 

அத்துடன், லைக் பிச்சை எடுப்பதற்காக, கிழிந்த உடை அணிந்துள்ள ராகுல் ப்ரீத் சிங், பிச்சை எடுப்பதில் எல்லோரையும் மிஞ்சிவிட்டார் என்று, மேலும் சிலர் காட்டமாக குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி ராகுல் ப்ரீத் தரப்பில் விசாரித்தபோது, அவர் புதிய படம் ஒன்றில் பிச்சைக்கார வேடத்தில் நடிப்பதாகவும், அதற்கான போட்டோஷூட் இதுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ, ராகுல் ப்ரீத் சிங்கின் இந்த புகைப்படத்திற்கு, லைக், ஷேர், கமெண்ட் எக்கச்சக்கமாக கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.