நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்த தனுஸ்ரீ தத்தா ஓரின சேர்க்கையாளர் என்றும் அவர் தம்மையே பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் நடிகை ராக்கி சாவந்த் கூறியிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

10 ஆண்டுகளுக்கு முன், இந்தி படத்தில் நடித்தபோது நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த சில வாரங்களுக்கு முன் புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது நானா படேகர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். ஆனால் தாம் கூறியது உண்மை என்று உறுதியாக தெரிவித்த நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது போலீசில் புகார் அளித்தார்.  

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நடிகர் நானா படேகர்க்கு ஆதரவாக குரல் எழுப்பிய நடிகை ராக்கி சாவந்த் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நானா படேகர் தம்மிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறிய நடிகை தனுஸ்ரீ தத்தா,  குறிப்பிட்ட படத்தின் படப்பிடிப்பின்போது குடிபோதையில் இருந்ததாக கூறி பரபரப்பை கிளப்பிய நடிகை ராக்கி சாவந்த், தற்போது நடிகை தனுஸ்ரீ தத்தா ஒரு ஓரின சேர்க்கையாளர் என கூறியிருப்பதுதான் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு முக்கிய காரணம். 

தனுஸ்ரீ தத்தா தம்மை பல பார்ட்டிகளுக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு ஃபுல் போதையில் தள்ளாடும் அவர் கஞ்சாவும் பிடித்திருப்பதாக நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார். தம்மையும் குடிக்க வைத்து அழைத்துச் சென்று பலமுறை ஓரினசேர்க்கை செய்துள்ளதாக கூறும் ராக்கி சாவந்த், நடிகை தனுஸ்ரீ தத்தா கூறுவது அனைத்துமே பொய் என்று விமர்சித்துள்ளார். நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா கூறிய புகார்கள் அனைத்துமே பொய் என்று விளக்கியுள்ளார். மேலும் தனுஸ்ரீ தாத்தாவுக்கு ஆதரவளிக்கக் கூடாது எனவும் ராக்கி சாவந்த் வலியுறுத்தியுள்ளார்.