திருமணம் பற்றி அறிவித்த ஒரே மாதத்தில்... காதல் கணவர் மீது ராக்கி சாவத் பரபரப்பு புகார்! வைரலாகும் வீடியோ..!

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தனது காதல் கணவர் அடில் கான் மீது கொடுத்த புகாரை தொடர்ந்து, அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

Rakhi Sawant filed an FIR her husband Adil Khan Durrani arrested

ராக்கி சாவந்துக்கும், அடில் கானுக்கும்... திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆகும் நிலையில் , கடந்த மாதம் தான் திருமணம் குறித்த அறிவிப்பை சாக்கி சாவத் புகைப்படத்துடன் வெளியிட்டு அறிவித்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்க்கு முக்கிய காரணம், சாக்கி சாவத்தை திருமணம் செய்து கொண்ட பிறகும், வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், எனவே தன்னை ஏமாற்றியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அடில் கானின் காதலி பெயர் தனு என்றும் அவருடன் கள்ள உறவு வைத்துள்ளதால். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை தொந்தரவு செய்வதாக ராக்கி சாவந்த் குற்றச்சாட்டுகளை அடுக்கியதோடு,  தன்னிடம் இருந்து பணம், நகை ஆகியவற்றை அபகரித்து விட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து ராக்கி சாவந்த் அடில் கான் மீது வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் ஒஷிவாரா ஸ்டேஷன் போலீசார் அடில் கானை கைது செய்தனர். இந்த தகவலை இன்று காலை ராக்கி சாவந்த் ஊடகங்களுக்கு தெரிவித்தார். மேலும் அடிலின் கைது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கைது செய்யப்பட்ட ஆதில் கான் அந்தேரி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு நடிகர் அடில் கானை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே ஆதித் என்பவரை திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில், அடில் கானை காதலித்து திருமணம் செய்தார். தங்களின் திருமணம் குறித்து கடந்த மாதம் தான் அதிகார பூர்வமாக அறிவித்த நிலையில், அதற்குள் இப்படி ஒரு பிரச்சனை இவர்கள் இருவருக்கும் இடையே வெடிகுண்டாய் வெடித்துள்ளது.

அடில் கான் கைது செய்யப்பட்ட பின் காவல் நிலையம் எதிரே இதுகுறித்து ராக்கி சாவந்த் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீர் என மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அவருடைய குடும்பத்தினர் காரில் ஏற்றி சென்று மருத்துவமனையில் அனுமதித்தாக கூறப்படுகிறது. இது குறித்த வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios