நிர்வாணக் காட்சியில் நடித்த பின்னர் தனக்கு நிறைய ஆபாச பட வாய்ப்புகள் வருவதாகவும், பல தொழிலதிபர்கள் தன்னை படுக்கைக்கு அழைப்பதாகவும் பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளது, திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சணல்குமார் சசிதரன் இயக்கிய செக்ஸி துர்கா என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சர்ச்சையில் சிக்கியவர் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே. கடவுள் துர்காவை இழிவுபடுத்திவிட்டதாக சிலர் குற்றஞ்சாட்டியதால், அந்த படத்தின் பெயர் எஸ்.துர்கா என்ற மாற்றப்பட்டது.

எஸ்.துர்கா படத்தில் நடித்த ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, தற்போது நெட் பிளிக்ஸில் வெளியாகிக் கொண்டிருக்கும் சேக்ரெட் கேம்ஸ் வெப் சீரியலில் பட்டையைக் கிளப்புகிறார். மும்பை மாநகரில் நடைபெறும் குற்றங்களையும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையும் குலைத்து தரும் இந்த தொடர் மிக எதார்த்தமாக இருப்பதாக பார்வையாளர்கள் கூறியுள்ளதால், ஒவ்வொரு வாரமும் அதை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

சேக்ரெட் கேம்ஸ் வெப் சீரியலில் நிழல் உலக தாதா கணேஷ் கெய்டோண்டிக்கு மனைவியாக வரும் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே, முழு நிர்வாணமாக நடித்த காட்சி, கடந்த வாரம் வெளியானது. இதையடுத்து, நிறைய ஆபாச படங்களில் நடிப்பதற்கு தனக்கு அழைப்பு வருவதாக, நடிகை ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

“என்னை சில தொழிலதிபர்கள் இரவு நேரங்களில் செல்போனில் தொடர்பு கொண்டு ஒருநாள் இரவுக்கு என்ன ரேட் என்று கேட்கிறார்கள். எஸ்.துர்கா படத்தில் நடித்தபோதே எனக்கு பல மிரட்டல்கள் வந்தன. முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என சிலர் மிரட்டினர். ஆனால், சேக்ரெட் கேம்ஸ் சீரியலில் நடித்த பிறகு வரும் செல்போன் அழைப்புகள் மிக வித்தியாசமாக இருக்கின்றன.

நான் எனது ஜாக்கெட்டை கழற்றுவது என்பது மிகப்பெரிய விஷயம். ஆனாலும், அதை கழற்றிவிட்டு, நிர்வாணமாக நடித்தேன். அப்போதே இயக்குநர்கள் இருவரும் என முழு தைரியத்தை கொடுத்தார்கள். பல கடினமாக சூழலை எதிர்கொள்ள வேண்டிருக்கும் என கூறினார்கள். ஒருவேளை நிர்வாணமாக நடிக்க விரும்பாவிட்டால், அவ்வாறு செய்ய வேண்டாம் எனக் கூறினார்கள். ஆனால், அவர்கள் கொடுத்த தைரியத்தை வைத்துக் கொண்டு நிர்வாணக் காட்சியில் நடித்தேன்.

அந்த காட்சியை சிலர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்டு, ஆபாச இணையதளங்களில் பதிவேற்றியுள்ளனர். என்னை ஆபாச நடிகையாக சித்தரித்துள்ளனர். பேஸ்புக், டுவிட்டரில் எனது நிர்வாணப் படம் பரவி வருகிறது. என்னை தொடர்பு கொள்ளும் சிலர், ஆபாச படத்தில் நடிக்கிறீர்களா? உங்களுக்கு தொடர்ந்து வாய்ப்பும், பணமும் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். ஆனாலும், அதுபோன்ற படங்களில் நான் நடிக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார் ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே.