முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் நிலையில்லாத குழப்பமான நிலை தான் நிலவி வருகிறது. 

இந்த நிலையில் சினிமாவில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் எந்த கருத்தையும் துணிச்சலாக பதிவு செய்யும் நடிகர் ராஜ்கிரண், தமிழக அரசியல் குறித்து பேசியுள்ளார். இதில் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஆட்சியும் சரியில்லை என்று துணிச்சலாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.அவர் மேலும் கூறியபோது 'கடந்த ஆறு மாதமாகத்தான் அதாவது ஜெயலலிதா மறைவிற்கு பின்னர்தான் ஆட்சியில் குழப்பம் ஏற்படுகிறது என்று கூறுவது சரியில்லை. ஜெயலலிதா இருந்தபோதும், அதற்கு முன்னர் ஆட்சி செய்த கலைஞர் ஆட்சியின்போதும் மக்கள் திருப்தி இல்லாமல்தான் இருந்தனர்.


தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அமைப்பே சரியில்லை. இதற்கு ஒரு மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றம் எப்போது வரும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட முயற்சி செய்ய வேண்டும்' என்று கூறினார்.