Asianet News TamilAsianet News Tamil

கொரோனா சாதாரண அடி அல்ல... பிசாசுத்‌தனமான அசுர அடி..! அதிரடி அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து, கொரோனா அச்சுறுத்தல் குறித்து, தன்னுடைய தொண்டர்களும், ரசிகர்களும், மக்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு வலியுறுத்தி வருகிறார். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த பலர், தங்களால் முடிந்த வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.
 

rajinikath statement for corona virus affected
Author
Chennai, First Published Jun 9, 2020, 6:55 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து, கொரோனா அச்சுறுத்தல் குறித்து, தன்னுடைய தொண்டர்களும், ரசிகர்களும், மக்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு வலியுறுத்தி வருகிறார். மேலும் ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த பலர், தங்களால் முடிந்த வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில்,  சில வாரங்களாக கொரோனா தொற்று தமிழகத்தில் உச்சத்தை எட்டி உள்ளது. இன்று மட்டும் 1600 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுளளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்திரம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இறப்பு விகிதமும் முன்பை விட அதிகமாக உள்ளது. எனவே மக்கள் முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் வயதானோர் வெளியில் செல்வதை தவிர்ப்பது சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

rajinikath statement for corona virus affected

இப்படி அதிகரித்து கொண்டே செல்லும், கொரோனா குறித்து தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் என அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது கொரோனா வைரஸ்‌ தொற்றால்‌ அவதிப்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ ஏழை. எளிய மக்களுக்கு இடைவிடாமல்‌ தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்‌ ரஜினி மக்கள்‌ மன்ற நிர்வாகிகளுக்கும்‌,உறுப்பினர்களுக்கும்‌ எனது மனமார்ந்த பாராட்டுக்களையும்‌ மகிழ்ச்சியையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும்‌ கொரோனா எனும்‌ அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கலங்க வைத்திருக்கும்‌ பிசாசுத்‌தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில்‌ பல விதங்களில்‌ நமக்குப்‌ பல கடுமையான வேதனைகளை தரும்‌.

உங்களது குடும்பத்தாரின்‌ எல்லா தேவைகளையும்‌ பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான்‌ உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும்‌ சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும்‌, முகக்‌ கவசத்தை
அணியாமலும்‌ இருக்காதீர்கள்‌.

ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு என குறிப்பிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios