Rajinikanth would not enter into politics - by gawtham karthick

நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அவர் சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டும் என்றும் நடிகர் கௌதம் கார்த்திக் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை மட்டுமல்லாது அனைவரின் மனதிலும் கேள்வியை எழுப்பி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது தனது அரசியல் பிரவேசம் குறித்து இலைமறைகாயாக தெரிவித்திருந்தார்.

இதற்கு, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, ரஜினி குறித்து மோசடி பேர்வழி என்றும், அரசியலுக்கு வரும் தகுதி அற்றவர் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக் கூடாது என்றும் அவர் நடிகராகவே இருக்க வேண்டும் என்றும் நடிகர் கௌதம் கார்த்திக் கூறியுள்ளார்.

நடிகர் கார்த்திக், நாடாளும் மக்கள் கட்சி நடத்தி வருகிறார். இவரின் மகன் கவுதம் கார்த்திக். இவர் இளம் கதாநாயகனாக திரையுலகில் உருவெடுத்து வருகிறார். 

நடிகர் கவுதம் கார்த்திக், கடல், முத்துராமலிங்கம், வை ராஜா வை, என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில், திருச்சியில், செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் கவுதம் கார்த்திக். அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி என்றை எழுப்பினர். 

இதற்கு பதிலளித்த அவர், நடிகர் ரஜினி திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டும் என்று கூறினார். நடிகர் ரஜினி எப்போதும் திரையுலக சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டும் என்றார்.

நீங்கள் அரசியலில் நுழையும் எண்ணம் உண்டா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த கவுதம் கார்த்திக், அரசியல் சார்ந்த குடும்பத்தைச் சார்ந்து இருந்தாலும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் நடிகர் கவுதம் கார்த்திக் கூறினார்.