Asianet News TamilAsianet News Tamil

Thalaivar 169 Update : ரஜினி நடிக்கும் ‘தலைவர் 169’ படத்தின் தலைப்பு இதுதான் - நெல்சன் எடுத்த அதிரடி முடிவு

Thalaivar 169 Update : தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
 

Rajinikanth starrer Thalaivar 169 movie title Update
Author
Tamil Nadu, First Published Mar 27, 2022, 11:19 AM IST

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் கூட்டணி

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இது ரஜினியின் 169-வது படம் என்பதால் தற்காலிகமாக இப்படத்தை தலைவர் 169 என அழைத்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

தலைவர் 169 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டாக்டர் மற்றும் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா மோகன் இப்படத்தில் நடிகர் ரஜினிக்கு மகளாக நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

Rajinikanth starrer Thalaivar 169 movie title Update

தலைப்பு என்ன?

இந்நிலையில், தலைவர் 169 படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நெல்சன் கடைசியாக இயக்கிய இரண்டு படங்களுக்கும் டாக்டர், பீஸ்ட் என ஆங்கிலத் தலைப்பை தான் வைத்திருந்தார். இதனால் தான் அடுத்ததாக இயக்க உள்ள தலைவர் 169 படத்துக்கும் அவர் ஆங்கிலத்தில் தான் தலைப்பு வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுதவிர பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்...  Beast movie : பீஸ்ட் படத்தின் பெயர் திடீரென மாற்றப்பட்டதால் ஷாக் ஆன ரசிகர்கள் - புது பெயர் என்ன தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios