அமித்ஷா யார் என்று இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும்  அவர் யார் என்று இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புகழின் உச்சிக்கே சென்று பாராட்டினார்.

 சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் கடந்த இரண்டு ஆண்டு சாதனைகளை ஆவணப்படுத்தும் புத்தக வெளியீட்டு  விழா நிகழ்ச்சி  நடைபெற்றது .

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்  அந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் சிறப்பு  நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக  கலந்து கொண்டார்

இத்தனை நாட்களாக காஷ்மீர் விவகாரத்தில் அமைதி காத்து வந்த ரஜினி, தன் நிலைபாடு என்னவென்று தன் பேச்சில் வெளி படுத்தினார், அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தமைக்கு முதலில் அமித்ஷா அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் அமித்ஷா யார் என்று இப்போது   தெரிகிறதா  அவர் யார் என்று இப்போது எல்லோருக்கும் புரிகிறதா  என்று கூறினார்  ரஜினியின்பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்  ரஜினியின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அமித்ஷா  அவரின் பேச்சில் மயங்கி பூரிப்பு அடைந்தார்  அமித் ஷா ஜி உங்களுடைய ஆபரேஷனை செக்சஸ் ஃபுல்லா முடிச்சு இருக்கீங்க உங்களுடைய மிஷன் வெற்றி பெற்று இருக்கு என்று கூறி அமித்ஷாவை  புகழின் உச்சிக்கே கொண்டு சென்றார் ரஜினி காஷ்மீர் விவகாரத்தில் மவுனம் காத்து வந்த ரஜினிகாந்த், இன்று அமித்ஷாவின் முன்னிலையில் அவரை புகழ்ந்தது மட்டுமல்லாமல் தன்னுடைய நிலைப்பாடு என்ன  என்பதையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்