rajinikanth Sacrifice important day for sridevi

நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை அன்று துபாயில் மரணமடைந்தார். இவருடைய உடல் இன்று நள்ளிரவு துபாயில் இருந்து மும்பைக் கொண்டுவரப்படுகிறது. 

இவருடைய இறுதி அஞ்சலியில் கலந்துக்கொள்ள கோலிவுட் திரையுலகின் முக்கிய பிரபலங்களான, ரஜினி, கமல், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் மும்பை சென்றுள்ளனர். 

இந்த நிலையில் இன்று ரஜினி - லதா தம்பதிகளின் 37வது திருமண வருடம். ஒவ்வொரு வருடமும் திருமண நாளை தங்களுடைய மகள்களுடன் கொண்டாடும் பழக்கத்தை உடைய இவர்கள் தற்போது ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த மும்பை சென்றுள்ளதால் திருமண விழா கொண்டாட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

இருப்பினும் ரஜினியின் ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.