பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகியுள்ள 'தர்பார்' திருவிழாவை ரசிகர்கள், அணைத்து திரையரங்கத்திலும் கேக் கட்டிங், பட்டாசு, ஆட்டம், பாட்டம், மேளம் தாளம் என ஜோராக கொண்டாடி வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள், தலைவரின் 'தர்பார்' புகைப்படம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட் போட்டு, தர்பார் படத்தை காண வந்திருந்தனர்.

இந்நிலையில், அணைத்து ரசிகர்களையும் மிஞ்சும் விதமாக தலைவரின் PRO ரியாஸ், தர்பார் படத்தில் மும்பை போலீஸ் கமிஷனர் ஆதித்திய அருணாச்சலமாக ரஜினிகாந்த் அணிந்து வரும் உடை போலவே போட்டுக்கு தர்பார் படத்தை பார்க்க வந்துள்ளார். இந்த புகைப்படம் வெளியாகி தற்போது, வைரலாக பரவி வருகிறது.