சத்யம் திரையரங்கில் குடும்பத்துடன் படம் பார்க்க சென்ற ரஜினி குடும்பத்தாரின் செயல் முகம் சுழிக்க வைத்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான 2.O படம் எதிர்பார்த்த அளவிற்கு கல்லா கட்டவில்லை என்றாலும், திரையரங்கை விட்டு ஓடாமல் தாக்குபிடித்துக் கொண்டிருக்கிறது. தியேட்டர் கூட்டமே இல்லாத நேரத்தில் தனது மனைவி லதா மற்றும் பேரப்பிள்ளைகளோடு சத்யம் திரையரங்கில் பார்த்தார் ரீல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினி குடும்பத்தோடு படம் பார்த்த அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. ரஜினி ரசிகர்களும் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வந்தனர் . அந்த புகைப்படத்தில் ரஜினி மற்றும் குடும்பத்திற்கு பின்னால் ஒரு பெண் நின்றுகொண்டே இருந்தார். அந்த பெண் சூப்பர்ஸ்டார் வீட்டில் வேலைக்காரி எனவும் அவர் மொத்த படத்தையும் நின்றுகொண்டே பார்த்தார் என்றும் கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தியேட்டரே காலியாக ஈ ஓட்டும்போது மொத்த சீட்டுகள் காலியாக இருக்கும் நிலையில், அந்த வேலைக்காரப் அமர வைக்காமல், நிற்க வைத்த பார்க்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூகவலை தளங்களில் தாறுமாறான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சிஸ்டத்தை சரி பண்ண வந்த ஆன்மீகம்
தன் வீட்டு வேலைக்காரச் சிறுமியை நிற்க வைத்து படம் பார்க்கச் செய்த படமும், செய்தியும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

நீங்க போற கார் டிரைவராவது
உக்காந்துக்கிட்டு வண்டி ஓட்டலாமா..
இல்ல அவரும் நின்னுக்கிட்டுத்தான் ஓட்டணுமா முருகேசா.. என தாறுமாறாக விமர்சித்துள்ளார்.