rajinikanth parthicipate kaala movie dubbing

காலா படம்:

‘கபாலி’ படத்தை தொடர்ந்து ,ரஜினி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் இணைந்து பணியாற்றிய திரைப்படம் ‘காலா’. இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

டப்பிங் பணி:

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கான டப்பிங்கை நாக் ஸ்டூடியோவில் பதிவு செய்து வருகிறார். காலா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நடிகர்கள்: 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.