நவீன தொழில் நுட்ப வளர்ச்சி உலகம் முழுவதும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், விரைவில் இந்தியாவிலும் 5 ஜி சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இதற்க்கு எதிராக தான் தற்போது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார், பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

5 ஜி சேவை துவங்க பட்டால் அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மனிதர்கள் மட்டுமின்றி பெரும்பாலான பறவைகள், விலங்குகள் உள்பட பிற உயிர்களுக்கும் பல்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் எனவே இந்த 5ஜி சேவையை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என்றும் நடிகை ஜூகி சாவ்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாகவும், தொகுப்பாளராகவும் பல்வேறு திறமைகளோடு அறியப்படும் இவர், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’நாட்டுக்கு ஒரு நல்லவன்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிப்பு என்பதை தாண்டி, பல்வேறு சமூக பணிகளிலும் ஆர்வம் கொண்டவர்.

இந்த நிலையில் 5ஜி தொழில்நுட்பம் காரணமாக இவர் தொடர்ந்துள்ள வழக்கில், 4ஜி சேவையால் ஏற்படுத்தும் பாதிப்பை விட, 5 ஜி சேவை... 10 முதல் 100 மடங்கு வரி அதிக கதிர் வீச்சை ஏற்படுத்த கூடியது. இதனால் மனிதர்கள் மட்டுமின்றி பாதிப்பு ஏற்படுவது இன்றி, பல்வேறு வகையான பறவைகள், விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே 5 ஜி சேவையை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என, நடிகை ஜூகி சாவ்லா பொதுநல வழக்கு ஒன்றை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.