* தனுஷ்  இரு வேடங்களில் நடிக்கும் ‘பட்டாஸ்’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மண்ணுக்கு சொந்தமான பாரம்பரிய விளையாட்டை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிரெய்லரில் உள்ள இப்படத்தின் காட்சிகள் சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தின் காட்சிகளை நினைவூட்டுவதாக, இணையத்தில் சிலர் விமர்சித்து, வெளுத்துள்ளனர். 
(உங்க நோக்கு வர்மத்த காட்டுங்க தனுஷ்)

* விக்ரமின் மகன் துருவ் நடித்த முதல் படமான ‘ஆதித்ய வர்மா’ ஃபெயிலாகிவிட்டது. ஆனாலும் துருவின் நடிப்பு பெரிதாய் சிலாகிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த படமாவது நிச்சய வெற்றி படமாக மகனுக்கு இருக்க வேண்டும்! என்று விக்ரம் எதிர்பார்த்தார். அநேகமாக அப்பாவும் - மகனும் இணைந்து நடிக்கும் படமாக இது இருக்கலாம்! என்கிறது கோடம்பாக்க வட்டாரம். (வாவ்! டபுள் சீயான்ஸ்)

* ரஜினியின் தர்பார் படம் நாளை ரிலீஸ். பொதுவாக பால் அபிஷேகம், கட் அவுட் கலாசாரம், மெகா போஸ்டர்கள் என்றுதான் ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இந்நிலையில் சேலம் ரசிகர் ஒருவர் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து, ரஜினியின் கட்-அவுட்டுக்கு பூ துவிட இருக்கும் விஷயம் கல்வியாளர்களையும், வளர்ச்சி நோக்கிய சிந்தனையாளர்களையும் தலையில் அடிக்க வைத்துள்ளது. (பிடிச்சு உள்ளே போடுங்க சார் இந்த நாட்டீ பாய்ஸை)

* ரஜினி படங்களில் ஆக்‌ஷன், மாஸ் காட்சிகளுக்கு நிகராக காமெடி காட்சிகளும் கலக்கும். அந்த காலத்தில் சுருளிராஜனில் துவங்கி கவுண்டமணி, செந்தில் அதன் பின் வடிவேலு, விவேக்கை கடந்து இதோ யோகிபாபு வரைக்கும் ரஜினியுடன் காமெடியில் கலக்கிவிட்டனர். குறிப்பாக ரஜினி - வடிவேலு கூட்டணி சந்திரமுகியில் சதாய்த்திருந்தது. இந்த நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க துவங்கியிருக்கும் புதிய படத்தில் காமெடிக்கு சூரி இணைந்திருக்கிறார். ஏற்கனவே சிவா இயக்கத்தில் ‘விவேகம்’ படத்தில் அஜித்துடன் சூரி காமெடிக்கு இணைந்திருந்தார் அது சோபிக்கவில்லை. இது தெரிந்து அரை மனதுடன் தான் ரஜினி,சூரியை ஓ.கே. பண்ணினார். 

ஆனால் ஷூட் துவங்கிய நிலையில் சூரியின் ரியாக்‌ஷன்களொன்றும் ஷெட்டிலேயே காமெடியை உருவாக்கவில்லையாம். எனவே தியேட்டரில் சொதப்பத்தான் போகிறது! என்று க்ரூ பேச துவங்கிவிட்டது. இது ரஜினியின் கவனத்துக்கும் போனது. ரஜினியும் இதை கவனித்து வைத்திருந்தார். இயக்குநர் இதைப் பற்றி லைட்டாக வருத்தப்பட, ரஜினி வழக்கம்போல் சிரித்துவிட்டு நகர்ந்துவிட்டாராம். ஆனால் ரஜினி  இப்போது வடிவேலை மிஸ் பண்ணுகிறார். இந்தப் படத்தில் வடிவேலு இருந்திருந்தால் நிச்சயம் டபுள் கலக்கலாக இருக்குமென்பது அவரது எண்ணம்! என்கின்றனர் அவரை அறிந்தவர்கள். (என்ன பண்ண மதுர மாப்பு தனக்குத்தானே வெச்சுக்கிட்டாரே ஆப்பு!)