சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் 'காலா'. கடந்த இரு தினத்திற்கு முன்பு இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார், முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு சென்றார். பொதுவாக அவர் வெளிநாட்டிக்கு சென்றால் கூட அங்கிருக்கும் ஊடகங்கள் அவரை விரட்டி விரட்டி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வெளியிடுவது வழக்கம்.

ஆனால் இந்த முறை ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருக்கும் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கறுப்புக் நிற உடையுடன் மிகவும் ஸ்டைலாக எஸ்கலேட்டர் இருக்கும் புகைப்படம் வெளியானது. இதைதொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் கோட் சூட் போட்டுக்கொண்டு மிகவும் ஸ்டைலாக நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது இது தான் தற்போது வளையதளத்தை கலக்கி வரும் புகைப்படம் என்று கூறலாம். 

அந்த புகைப்படம் இதோ...