"பேட்ட" படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்தாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக சமீபகாலங்களில் தகவல்கள் வெளியாகின.  இந்த படம் பற்றிய பல்வேறு தகவல்கள் இணையத்தில் ரவுண்டாடிக்கிறது. அதிலும் படத்தில் ரஜினியின் பயங்கரமான கெட்டப் ஒன்று வைரலாகி வருகிறது. 

இணையத்தில் ரவுண்டடிக்கும் போஸ்டரில் ரஜினி வாயில் பீடியும், செம்ம ஸ்டைலான தாடியும் என மாஸாக இருப்பதால் ரஜினி ரசிகர்களும் இதனை ஷேர் செய்து இணையத்தில் தெறிக்க விட்டு  வருகின்றனர். 

இந்த படத்தின் முதற்கட்ட பணிகளும், நடிகர் நடிகைகளின் தேர்வும் மும்மரமாக நடந்து வருகிறது. 2.0 படத்தையடுத்து லைகா நிறுவனமே தயாரிக்க உள்ளது.  ரசிகர்கள் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிருக்கும் வேளையில் தற்போது ரஜினி ரசிகர்கள் உருவாக்கிய புதிய போஸ்டர் ஆவலை தூண்டியுள்ளது.

இந்நிலையில், இந்த படம் பற்றிய மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதில், ரஜினி நடிக்க 90 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்கி தொடர்ந்து சென்னை, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பேட்ட படத்தை அடுத்து அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.