வித்தியாசமான கதை

பீட்ஸா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை பெற்று ஸ்கோர் செய்தவர்.வித்தியாசமான கதை மூலம் மக்களை ஈர்த்த இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

பிரபுதேவா

மேலும் பிரபுதேவாவை வைத்து மெர்குரி என்ற படத்தை இயக்கியுள்ளார் கார்த்தி சுப்புராஜ். சைலண்ட் திரில்லர் படமான இதை கார்த்திக் சுப்புராஜே தயாரித்துள்ளார். மேலும் ஏப்ரல் 13 ம் தேதி இதை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

அனிருத்

இதைத் தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து இயக்கவுள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.இந்நிலையில் புதிதாக ரஜினி படத்தில் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வெற்றி

இதுவரை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்ஸா, சூது கவ்வும், ஜிகர்தண்டா அனைத்து வெற்றி படங்களுக்கு இசையமைத்தவர்.இந்நிலையில் கார்த்தி சுப்புராஜ் ரஜினியை வைத்து இயக்கும்  இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படம் வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.