Rajinikanth kala fils will be release april 27th
இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி ரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா. இந்த படத்தில் அவருடன் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திர கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சிறுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு தப்பி செல்லும் ரஜினிகாந்த் அங்கு சக்தி வாய்ந்த டான் ஆக தாராவியில் வாழ்ந்து வருகிறார். அவரை எதிர்ப்பவர்களுக்கு காலாவாக அவர் இருக்கிறார். வித்ததியாசமான கதைக்களத்துடன் இந்தப்படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற படத்திலும் ரஜின்காந்த் நடித்து வருகிறார்.ஆனால் 2.0 படத்தின் விஷுவல் எபக்ட்ஸ் வேலைகள் முடிவடைய காலதாமதமாகும் என்பதால் முதலில் காலா படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படம் வருகிற ஏப்ரல் 27ந்தேதி திரைக்கு வரும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைத்து உள்ளார்.
