சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்பு என்றாலும்,  வெளி இடங்களுக்குச் சென்றாலும் எந்த வசதியையும் எதிர்பார்க்காமல் கிடைத்த இடத்தில் படுத்து தூங்கி ஓய்வெடுப்பதுதான் அவரது பழக்கமாக இருந்து வருகிறது. 

தற்போது அவர் ஏ.ஆர்,முருகதாசின்  தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின படப்பிடிப்பு கிட்டதட்ட நிறைவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகில் உள்ள அவரது நண்பர் அசோக்கின் பண்ணை வீட்டுக்குச் சென்று தங்கி இருந்தார்.

தனது குடும்பத்தினர், உதவியாளர்கள் என யாரும் இல்லாமல் தனது கார் டிரைவரை மட்டும் அழைத்துக் கொண்டு அந்த பண்ணை விட்டுக்குச் சென்று ரெஸ்ட் எடுத்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது நண்பர் வீட்டில் எளிமையாக தூங்கி ரெஸ்ட் எடுத்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.