ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. சமீபத்தில் இவர் நடித்த பாலிவுட் படத்தில் ஆபாசமாக நடித்தது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது.
இந்நிலையில் ரஜினிகாந்த் கபாலி பட ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடந்த சில விஷயங்கள் பற்றி பகிர்ந்துள்ளார் ராதிகா ஆப்தே.
அதில் முக்கியமானது சூப்பர் ஸ்டார் இவருக்கு செய்த உதவி, இவருக்கு தமிழ் தெரியாது என்பதால் இவர் ரஜினியுடன் பேசும்போது மராத்தியில் தான் பேசுவாராம்.
படப்பிடிப்பு தளத்தில் ரஞ்சித் கூறும் வசனங்களை கூட ரஜினி தான் மராத்தியில் மொழி பெயர்த்து கூறுவாராம்.
அதோடு எவ்வளவு பெரிய ஸ்டார் அவர் தனக்காக மொழி பெயர்த்ததை ராதிகா பெருமையாக கூறியுள்ளார்.
பொதுவாக எல்லா படங்களிலும் தமிழ் தெரியாத நடிகைகளுக்கு உதவி இயக்குனர்கள் தான் மொழி பெயர்த்து கூறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
