கடந்த ஆகஸ்ட் மாதம், கதாசிரியரும், தயாரிப்பாளருமான கலைஞானத்திற்கு நடத்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  கலைஞானம் தற்போது வாடகை வீட்டில் இருப்பதை அறிந்து வருத்தம் அடைவதாகவும், அவருக்கு வீடு வாங்கிக் கொடுப்பேன் என்று மேடையிலேயே தெரிவித்தார்.

பல பிரபலங்கள் கலந்து கொண்ட கலைஞானத்தில் பாராட்டு விழாவில்  நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். 

இதைத் தொடர்ந்து மேடையில் பேசிய ரஜினிகாந்த் தற்போது ‘கலைஞானம் வாடகை வீட்டில் வசிக்கிறார் என்ற தகவல் எனக்கு இப்போதுதான் தெரியும். இது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அவருக்கு நானே வீடு வாங்கித் தருகிறேன். தமிழ் சினிமாவில் கதாசிரியர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும் என அதிரடியாக பேசினார்.

கலைஞானம் பற்றி தெரியாத தயாரிப்பாளர்களோ... இயக்குநர்களோ... இருக்க முடியாது. கதையில் சிக்கல் ஏற்பட்டால் உடனே கலைஞானத்தை தான் அழைப்பார்கள். இயக்குநர் தயாரிப்பாளருக்கு அடுத்து கதாசிரியரின் பெயரை முன்னிலைப்படுத்தி போட வேண்டும் என ரஜினி கேட்டுக் கொண்டார். 

இதை தொடந்து பேசிய, ஹீரோவாக இருக்க வேண்டும் என  நான் ஆசைப்பட்டதில்லை, பைக், வீடு என சந்தோஷமாக இருக்க நினைத்தேன். வில்லனாக நடித்துக்கொண்டிருந்த போது திடீரென ஹீரோவாக நடிக்க அழைத்ததால் அதிர்ச்சி அடைந்தேன். 

'பைரவி' படத்தில்தான் எனக்கு முதன்முதலில் கிரேட் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. பைரவி படத்திற்குபின் நானும், கலைஞானமும் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்ற வருத்தம் இப்போது வரை உள்ளது என தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், கதாசிரியர் கலைஞானத்திற்கு தங்கச்சங்கிலி அணிவித்து அவரிடம் ஆசிர்வாதம் பெற்ற காட்சிகள் பார்பவர்கள் நெஞ்சங்களையே உருக்கும் விதமாக இருந்தது.

இதைத்தொடர்ந்து, தற்போது... சொன்ன வாக்கை காப்பாற்றியுள்ளார் ரஜினிகாந்த். தான் சொன்னது போலவே, தயாரிப்பாளர்  கலைஞானத்திற்கு சென்னை வளசரவாக்கத்தில் 45 லட்ச ரூபாயில் வீடு வாங்கி கொடுத்து, கிரஹபிரவேச நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார் ரஜினி.