ஒரு காலத்தில் நடிகர் சூர்யா படங்களுக்கு என்று மிகப்பெரிய கிரேஸ் இருந்தது! என்னடா, ரஜினியை டைட்டில்ல போட்டுட்டு சூர்யா பத்தி நீயூஸ் எழுதுறாங்கன்னு ஜெர்க் ஆகாதீங்க!. மேட்டர் இருக்குது. சூர்யாவை இயக்கவும், கொண்டாடவும் இயக்குநர்கள் ஆர்வப்பட்டாங்க.

ஆனால் இன்னைக்கு நிலைமை தலைகீழ். தொடர் தோல்விகளால் துவண்டுவிட்டது சூர்யாவின் மார்கெட். இந்த நிலையில் ஞானவேல்ராஜாவுக்கு முன்பே கொடுத்திருந்த உறுதிமொழியின் படி இப்போது சூர்யாவை வைத்து படம் ஒன்றை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சிறுத்தை சிவா. ஆனால் இந்த நேரம் பார்க்க அவருக்கு ரஜினியின் கால்சீட் ஓ.கே.வாகிவிட்டது. ஆனால் ஞானவேலும், சூர்யாவும் அவரை விட மாட்டேங்கிறாங்க.

 இதனால் கிட்டத்தட்ட வெறுப்பாகவே சூர்யாவின் படத்தில் சிவா கால் வைத்துள்ளதாக சொல்கிறார்கள். இதை முடித்துவிட்டு ரஜினியிடம் ஓட தயாராகிவிட்டதால், அவசரப்படுகிறாராம். இந்நிலையில்  ரஜினியுடன் தான் செய்யப்போகும் ப்ராஜெக்டை பற்றிய செய்தி ரெகுலராக வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது சிவாவின் வெறித்தன ஆசையாக இருக்கிறதாம். 

அதனால் ஏதோவொரு ஸ்கூப்பை அந்தப் படத்தை வைத்து கிளப்பிக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக ‘சிவா இயக்கும் ரஜினி படத்தின் இசையமைப்பாளர் யார்?’ எனும் கேள்வி ஓடிக் கொண்டிருக்கிறது. முதலில் அது யுவன் சங்கர் ராஜா! என்று கிளப்பினர், பின் இப்போது ‘விஸ்வாசம் ஆல்பம் ஜெயித்ததால் இப்போது மீண்டும் இமானுடன் இணைய சிவா விரும்புகிறார்.’ என்று  கிளப்பியுள்ளனர்.

 ஒரு கையில் யுவன், இன்னொரு கையில் இமான் என இரண்டு பேரையும் வைத்திருக்கும் ரஜினி, யாரை டிக் செய்யப்போகிறாரோ என சிவா நகம் கடித்து வருவதாகவும் கிளப்பிவிட்டுள்ளனர். 
நடத்துங்க!