பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு ஆந்திராவில் நேரடியாக அரசியலில் ஈடுபட்டாலும் சந்திரபாபுவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்தாண்டு தேர்தல் நேரத்தில் ஜெகன்மோகனின் கரத்தை  வலுப்படுத்துவதற்காக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்வதாக  கூறி ஜெகன்மோகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

மேலும் ஜெகன்மோகனின் சந்திரகிரி தொகுதி வேட்பாளர் பாஸ்கருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரமும் மேற்கொண்டார். இந்நிலையில் நடிகர் மோகன்பாபு தனது மகன் நடிகர் விஷ்ணு, மகள் நடிகை லட்சுமி ஆகியோருடன் நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது  பாஜவில் சேர வேண்டும் என்று மோகன்பாபுவிற்கு  பிரதமர் அழைப்பு விடுத்ததாகவும் இதனை மோகன்பாபு ஏற்றதாக கூறப்படுகிறது. 

நடிகர் ரஜினியின் நெருங்கிய  நண்பரான மோகன்பாபு தற்போது பாஜவில் இணைய முடிவெடுத்திருப்பது ரஜினியின் விருப்பத்தின் பெயரிலேயே நடந்ததாகவும் கூறப்படுகிறது. மோகன் பாபு பாஜ.வில் இணைய இருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.