rajinikanth fans sad moment today

இந்த படத்தில் புதுமையான ரஜினிகாந்தை பார்த்ததாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பல தியேட்டர்களில் கோலாகலமாக வெளியாகி நல்ல வசூல் வேட்டை செய்து வருகிறது 'காலா' 

இந்நிலையில் கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்தும் படத்தை வெளியிட முடியாத சூழல் நிலவுகிறது.

130 தியேட்டர்களில் வெளியாவதாக இருந்த காலா படம் ராய்பூர், பெல்லாரி பகுதிகளில் மட்டும் முற்பகல் 11 மணிக்கு வெளியானது. பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் காட்சிகள் நிறுத்தப்பட்டது.

போராட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் சோகமான ரசிகர்கள் பலரும் படம் பார்ப்பதற்காக ஓசூர் நோக்கி போய்விட்டார்களாம். மேலும் பெங்களூரு, மைசூரு, மாண்டியா, கோலார், சிவமொக்கா, தாவணகெரே பகுதிகளில் படத்தை வெளியிட்ட பெரியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் படம் நிறுத்தப்பட்டதால் முன்பதிவு செய்து தியேட்டர்களில் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. மேலும் தற்போது படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் விரைவில் மற்ற இடங்களிலும் படத்தை வெளியிட வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.