பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0வில் பிஸியாக நடித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். திடீர் என உடல் பரிசோதனைக்காக அமெரிக்க பறந்தார்.
தற்போது அமெரிக்காவில் தீபாவளியை தன் மகள் ஐஸ்வர்யாவுடன் கொண்டாட தயாராகி விட்டார் சூப்பர் ஸ்டார்.
இப்போது தீபாவளிக்காக தனது மகள் ஐஸ்வர்யாவுடன் ஷாப்பிங் செய்வது போன்றும், அமெரிக்காவில் தான் தங்கி இருக்கும் வீட்டின் முன்பு அவர் எடுத்து கொண்ட புகை படமும் வெளியாகி உள்ளது.

இது ரஜினி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காரணம் இவருக்கு உடல் நலம் இல்லாத காரணத்தால் தான் அமெரிக்கா சென்றார் என கிசு கிசுக்க பட்ட வேளையில்.
அதை பொய்பிக்கும் வகையில் இந்த புகை படம் வெளியாகி மேலும் அவர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.
