''தர்பார்'' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாகவும், வில்லியாக குஷ்புவும், வக்கீலாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. 

"அண்ணாத்த" என்ற தலைப்புக்கு ஏற்ற மாதிரி அண்ணன் - தங்கை சென்டிமெண்ட் செம்ம எவியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தில் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கொல்கத்தா அல்லது புனே போகலாம் என படக்குழு திட்டமிட்டிருந்தனர். 

ஆனால் உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதி, இந்தியாவின் வடமாநிலங்களை விட்டுவைக்கவில்லை. எனவே வடமாநிலம் பக்கம் ஷூட்டிங் போக கூடாது என்று முடிவெடுத்த ''அண்ணாத்த'' டீம், அந்த ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டார்களாம். அதற்கு பதிலாக மீதி காட்சிகளையும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே எடுக்க திட்டமிட்டுள்ளனராம். இதற்காக ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் எக்ஸ்ட்ரா செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றதாம்.