காலா:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'காலா' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்றாலும் வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே சில படங்களால் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்த தனுஷ் இந்த படத்தால் மேலும் கடன் பிரச்சனையில் சிக்கி தத்தளித்து கொண்டிருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. 

சம்பளம் வாங்காத ரஜினி:

இந்நிலையில் ரஜினிகாந்த், எந்த சம்பளம் வாங்கிக்கொள்ளாமல் 'காலா' படத்தில் நடித்துக் கொடுத்ததாகவும் இருப்பினும் படம் ரிலீசாகி பெரிய அளவில் வெற்றி பெறவில்லையாம்.

ரஜினி கோபத்திற்கு ஆளான தனுஷ்:

காலா படத்தை, பா.ரஞ்சித்தை இயக்கி இருந்தாலும், தனுஷ் முயற்சியிலும், யோசனையிலும் தான் படம் முழுக்க முழுக்க எடுக்க பட்டதாம். இதனால் படத்தின் முடிவு கலவையான விமர்சனங்களையே பெற்று வருவதால், ரஜினி தனுஷ் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த படம் சரியாக போகாததால், தன்னுடைய அரசியல் முயற்சிக்கு இது பலவீனத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் ரஜினி வருத்தத்தோடு இருப்பதாக ரஜினியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.