சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த்வரும் '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு மெலடி பாடலை உக்ரைன் நாட்டில் படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டிருந்தார். 

ஆனால் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த பாடலை இந்தியாவில் படமாக்கி கிராபிக்ஸ் மூலம் உக்ரைன் பின்னணியை ஷங்கர் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்காக கிராபிக்ஸ் வல்லுனர்கள் இரவுபகலாக பணிபுரிந்து வருகிறார்களாம்.

வரும் 2017ஆம் ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 80% முடிவடைந்துவிட்டதாகவும், விரைவில் 100% படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணி தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.