‘சூரரைப்போற்று’படப்பிடிப்பு அடுத்த படத்துக்கு தயாராகிக்கொண்டிருந்த நடிகர் சூர்யாவை போனில் அழைத்து அப்செட் செய்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இச்செய்தி தற்போது கோடம்பாக்கத்தில் வைரலாகிவருகிறது.

தனது அடுத்த படமாக சூர்யா முடிவு செய்திருந்தது விஸ்வாசம் சிவா இயக்கத்தில் நடிக்கவிருந்த ‘சூர்யா 39’படத்தைத்தான். இப்பட அறிவிப்பு சுமார் 3 மாதங்களுக்கு முன்பே வந்திருந்த நிலையில் அதே சிவாவை தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு வரவழைத்து அவரை தனது அடுத்த பட  இயக்குநராக கன்ஃபர்மே செய்துவிட்டார் ரஜினி.

கடந்த வாரம் ரஜினியுடன் நடந்த இரண்டாவது சந்திப்பில் தான் அடுத்த சூர்யா படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிடம்  அட்வான்ஸ் வாங்கிய விபரத்தை சொன்ன சிவா,’சூர்யா படத்துக்கு முந்தி உங்க படத்தை இயக்கணும்னா முறைப்படி அவங்க கிட்ட அனுமதி வாங்கணுமே என்று தனக்கு இருக்கும் தர்மசங்கடத்தைச் சொல்லியிருக்கிறார். உடனே சற்றும் யோசிக்காத ரஜினி,’சூர்யாவுக்கு போன் போட்டுக்குடுங்க. நானே பேசுறேன்’என்றபடி அவரை அழைத்து ‘எனக்காக ஒரு 4 மாசத்துக்கு சிவாவை விட்டுக்கொடுங்க. நடுவுல ஒரு படம் பண்ணி முடிங்க. அதுக்குள்ள சிவாவை அனுப்பி வைச்சுடுறேன்’என்று சாமர்த்தியமாகப் பேச வேறு வழியின்றி ஓ.கே.சொன்னாராம் சூர்யா.