2019ம் ஆண்டு விடைபெற்றுக்கொள்ள இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டின் கவர்ச்சி நடிகை, அதிகளவில் ட்விட்டரில் ட்ரெண்டானவர்கள் போன்றவர்களின் பட்டியலை சமீபத்தில் அறிவித்திருந்தது. அந்த வகையில், 2019ம் வருடத்திற்கான போர்ப்ஸ் இந்தியா இதழின் டாப் 100 செலிப்ரிட்டிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலானது பொதுவாக இந்த ஆண்டின் அதிகம் ஈட்டப்பட்ட வருவாய் மற்றும் அவர்களின் புகழ் அளவை மையமாக வைத்து இந்த தரவரிசை பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். இவர் 2019ம் ஆண்டில் 252 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் அக்‌ஷய் குமாரும், மூன்றாவது இடத்தில் சல்மான் கானும் உள்ளனர். நான்காவது இடத்தில் அமிதாப் பச்சன், ஐந்தாவது இடத்தில் தோனி உள்ளனர். 6-ம் இடத்தில் நடிகர் ஷாருக்கான் இடம்பெற்றுள்ளார்.

அதிகமாக பாலிவுட் நடிகர்களையும், கிரிக்கெட் வீரர்களையும் கொண்டுள்ள இந்த பட்டியலில் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்களும் இடம்பிடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் 13வது இடத்தை பிடித்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆ.ர்.ரகுமான் 16வது இடத்தையும், நடிகர் விஜய் 47வது இடத்தையும் பிடித்துள்ளார். நடிகர் அஜித் 52வது இடத்தையும், தனுஷ் 64வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

 

இந்தப்பட்டியல்படி பார்த்தால்  விஜயை விட ரஜினி 34 இடங்கள் முன்னணி வகிக்கிறார். அதேபோல் விஜயும் - அஜித்தும் 5 இட வித்தியாசம் வகிக்கின்றனர். என்னதான் விஜய்- அஜித் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலில் வாரிக்குவிப்பதாக துள்ளிக்குதித்தாலும் இந்திய அளவில் உச்சத்தில் இருக்கிறார் ரஜினி.