ரஜினிகாந்த் இத்தனை நாட்களாக வாழ்வதே சாதனை தான் என திமுக- திக ஆதரவாளர் மதிமாறன் விமர்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   

4 வருடங்களை கடந்த சினிமா பயணத்தில் தனி முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் என்றும் ஓய்வு இல்லாத ரஜினிக்கு மேலும் கவுரவம் சேர்க்கும் வகையில் மத்திய அரசு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருதை அறிவித்துள்ளது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறப்பு விருதாக ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருதையும் வழங்க உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனை ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூகவலைதளமான ட்விட்டர் பக்கத்தில் #வாழ்நாள்சாதனையாளர்ரஜினி #Rajinikanth #IFFI2019 #ICON OF GOLDEN JUBILEE ஆகிய 4 ஹேஸ்டேக்குகள் டாப் ட்ரெண்டிங்கில் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் திமுக- திக ஆதரவாளரான மதிமாறன் ‘’ ரஜினிகாந்த் இவ்வளவு நாட்கள் வாழ்வதே சாதனை தான் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது ரஜினி ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மதிமாறனை வறுத்தெடுத்து கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Scroll to load tweet…