'பேட்ட' படத்திற்கு பின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத்தில் உள்ள, ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பரபரப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் மீண்டும் ஷூட்டிங் பணிகள் துவங்க அனுமதி கொடுத்துள்ளதால், முதல் கட்டமாக ரஜினி இல்லாத காட்சிகளின் படப்பிடிப்புகள் நடைபெறும் என்றும் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் ரஜினிகாந்த் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் பல வருடங்கள் கழித்து, சூப்பர் ஸ்டாரின் வெற்றி பட நாயகிகளாக மீனா மற்றும் குஷ்புவுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருவது நாம் அறிந்தது தான்

கடந்த சில வருடங்களாகவே, பெரிதாக செண்டிமெண்ட் கதைகளில் நடிக்காத சூப்பர் ஸ்டாருக்கு இந்த படம் சென்டிமென்ட் கலந்த குடும்ப படமாக உருவாக உள்ளதாகவும், இந்தத் திரைப்படம் ரசிகர்களை மட்டுமின்றி தாய்மார்களையும் மிகவும் கவரும் வகையில் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த், ஜனவரி மாதத்தில் இருந்து தன்னுடைய அரசியல் பணிகளில் முழு வீச்சில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சி குறித்தும் ஜனவரி மாதம் அறிவிக்க உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். எனவே அரசியல் பணிகள் வேகமெடுத்துள்ளதால், தற்போது தான் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் வேலையை விரைந்து முடிக்க வேண்டும் என இயக்குனர் சிவாவிற்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.