Rajini Praise to Maanaadu| மாநாடு படம் குறித்த தன்னை நேரில் அழைத்து சூப்பர் ஸ்டார் பாராட்டியாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

பின்னர் பைனான்சியர் - தயாரிப்பளார் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு என் ஓ சி வழங்கப்பட்டதை அடுத்து திட்டமிட்டபடி கடந்த நவம்பர் 25 ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட்டது. 

ரிலீஸ் செய்வதில் பல சிக்கல்களை சந்தித்து வந்த மாநாடு ஒருவழியாக ஆனால் கடந்த 25-ம் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பான மாநாடு திரையரங்குகளில் அதிரடி கட்டி வருகிறது.

நீண்ட நாள் கழித்து சிம்புவின் மாஸ் என்ட்ரியான இந்த படம் டைம் லூப் என்னும் கான்சப்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மாஸ் பிஜிம், வழக்கமான பில்டப் இன்மை என சிம்பு படத்திற்கான எந்த வித அலட்டலும் இல்லாமல் வெளியாகியுள்ள இந்த படம் சிலம்பரசனின் புதிய பரிமாணத்தை வெளிக்கொணர்ந்துள்ளது. 

இந்த படம் குறித்து பிரபலங்கள் பலரும் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிம்புவின் மாநாடு படத்தை பார்த்து விட்டு தயாரிப்பளார் சுரேஷ் காமாட்சியை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ள சுரேஷ் காமாட்சி நல்லதை தேடி பாராட்டு தெரிவிக்கும் இந்த மனசே உங்களை உச்சத்தில் வைத்துள்ளது என்னும் நெகிழ்ச்சி பதிவை செய்துள்ளார்..

Scroll to load tweet…